Duleep Trophy: ஸ்ரேயஸ் அய்யர் அணியை வீழ்த்திய ருதுராஜின் ‘இந்தியா சி’

Published On:

| By christopher

2024 துலீப் தொடர் செப்டம்பர் 5 அன்று துவங்கிய நிலையில், இந்தியா ஏ, பி, சி, டி என 4 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன.

முதல் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியும், அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியும் மோதின.

மறுபுறத்தில், 2வது பேட்டியில் ருதுராஜ் கெய்க்வாத் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா சி அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்தியா டி அணி, துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அன்சுல் கம்போஜ் மற்றும் விஜயகுமார் வைசாக் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 48 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.

ஆனால், அக்சர் பட்டேல் மட்டும் கடைசி வரை பொறுப்பாக விளையாடி 86 ரன்கள் சேர்த்த நிலையில், இந்தியா டி அணி 164 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா சி அணிக்காக விஜயகுமார் வைசாக் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணியும் மளமளவென விக்கெட்களை இழந்து தடுமாற, 168 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அந்த அணிக்காக பாபா அபரஞ்சித் 72 ரன்களும், அபிஷேக் போரல் 34 ரன்களும் சேர்த்திருந்தனர். இந்தியா டி அணிக்காக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

4 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸில் விளையாட களமிறங்கிய இந்தியா டி அணி, ஷ்ரேயஸ் அய்யர் & தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதங்களால் 236 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இந்தியா சி அணிக்காக மனவ் சுதர் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதை தொடர்ந்து, 233 ரன்கள் இன்ற இலக்கை நோக்கி இந்தியா சி அணி களமிறங்கியது. கடைசி இன்னிங்ஸில் ருதுராஜ் (44 ரன்கள்) மற்றும் சாய் சுதர்சன் (22 ரன்கள்) நல்ல துவக்கம் வழங்கினர்.

அடுத்து வந்த ஆர்யன் ஜுயால் (47 ரன்கள்), ரஜத் படிதார் (44 ரன்கள்), அபிஷேக் போரல் (35 ரன்கள்) பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்க்க, இந்தியா சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், பந்துவீச்சில் 8 விக்கெட்களை கைப்பற்றி, பேட்டிங்கில் 20 ரன்கள் சேர்த்த மனவ் சுதர் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: முகப்பொலிவுக்கு வெளிப்பூச்சுகள் தற்காலிகம்தான்… இந்த உணவுகளே நிரந்தரம்!

ஹெல்த் டிப்ஸ்: ஏழே நாள்களில் எடையைக் குறைக்க முடியுமா?

டாப் 10 நியூஸ் : தவெக மாநாடு விஜய் அறிவிப்பு முதல் சுப்மன் கில் பிறந்தநாள் வரை!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பூப்போன்ற இட்லி செய்யலாம் வாங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share