சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்சில் சந்தேகமா? – சுனில் கவாஸ்கர் விளக்கம்!

Published On:

| By indhu

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்சில் எந்தவித சந்தேகமும் இல்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்தது.

அதை சுட்டிக்காட்டிய முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், “ஆஸ்திரேலிய அணி தான் ஏமாற்று அணி, அந்த அணியின் ஏமாற்று வேலை செய்யும் வீடியோவை பார்த்துவிட்டு வந்து சூர்யகுமார் யாதவை நோக்கி கை காட்டி விமர்சனம் செய்யுங்கள்.

இறுதிப் போட்டியில் டேவிட் மில்லரின் கேட்ச்சை சூர்யகுமார் பிடித்தது சரியானது தானா? என ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அந்த கேட்ச் குறித்த அனைத்து வீடியோக்களிலும் சூர்யகுமார் யாதவ் தன்னை அற்புதமாக நிலை நிறுத்திக்கொண்டு பந்தை பிடிப்பது தெரிகிறது. அவர் பந்தை பிடித்து பின்பு மீண்டும் மேலே தூக்கிப்போட்டு, பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று விட்டு, பின் மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்து அதை நிறைவு செய்தார்

அந்த கேட்ச் பற்றி யாருமே கேள்வி எழுப்பவில்லை. ஆனால், அந்த செய்தியை எழுதிய செய்தியாளர் மட்டும் கேள்வி எழுப்புகிறார். அவர் ஆஸ்திரேலிய அணி செய்த பத்து அப்பட்டமான ஏமாற்று வேலைகள் என்ற வீடியோவை பார்க்க விரும்புகிறார்.

அதை பார்த்த பின்பு சூர்யகுமார் யாதவை நோக்கி உங்கள் விரல்களை நீங்கள் காட்டலாம்” என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மழை வரப்போகுதே… குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!

மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? வெளியான புதிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel