டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இன்று ( நவம்பர் 10 ) விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 13 ஆம் தேதி பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா? அல்லது ரிஷப் பண்ட் விளையாடுவாரா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் விளையாடுகிறார். இதன் காரணமாக இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக்குக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் ஏழாவது பேட்ஸ்மேனாக விளையாடுவதே சிறந்தது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ரிஷப் பண்ட் பிடிக்கும்
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘கிரிக்கெட் லைவ்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், “ராகுல் டிராவிட் உடன் நான் சார்ந்து போகிறேன். ஏனெனில் அவருக்கு ரிஷப் பண்ட்டை மிகவும் பிடிக்கும்.

ஆனால் என்னை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அந்த இடத்தில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.
நான் அவரை ரசிக்கிறேன்
அந்த வகையில் தான் நான் தினேஷ் கார்த்திக்கை மிகவும் ரசிக்கிறேன். எம்.எஸ் தோனி, யுவராஜ் சிங் போன்றோரால் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் அதனை செய்து காட்டுகிறார்.
தோனியுடன் ஒப்பிட வேண்டாம்
எனவே அவரை யுவராஜ் மற்றும் தோனியுடன் ஒப்பிடுவதெல்லாம் நியாயம் அல்ல. தினேஷ் கார்த்திக் இந்த இடத்திற்கு வருவதற்கு நிறையவே உழைத்துள்ளார். அதே வேளையில் தோனி, யுவராஜ் போன்றவர்களின் ஃபினிஷ்களை அவரிடம் எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒன்று. தினேஷ் கார்த்திக் பொதுவாகவே ஒரு மிகச் சிறந்த வீரர். அவரால் முடிந்தவற்றை அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து செய்து வருகிறார். அவருக்கு நிச்சயம் தேவையான வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்