2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ட்ரான்ஸ்பர் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. பின் அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை நிர்வாகம், திடீரென ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. Rohit Sharma left from Mumbai Indians
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு, ரோகித் சர்மாவின் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்தும் விமர்சனங்களை பெற்றது.
யுவ்ராஜ் சிங் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களும், ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது குறித்து தங்கள் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
தொடர் தோல்விகளை சந்திக்கும் மும்பை
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையில், குஜராத் அணிக்கு எதிராக 2024 ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் களமிறங்கிய மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான 2வது போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி, இப்போட்டியில் மும்பை அணியின் மோசமான பந்துவீச்சால், ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக ஸ்கோரை (277 ரன்கள்) ஐதராபாத் அணி எட்டியது.
மேலும், இப்போட்டியில் மும்பை அணிக்காக அனைவரும் 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய நிலையில், ஹர்திக் பாண்டியா மட்டும் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது, ரசிகர்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இதை தொடர்ந்து, 2024 ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் முதன்முறையாக களம் கண்ட மும்பை, ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், அந்த அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்விடைந்து, மும்பை அணி தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை அணியில் 2 பிரிவுகள்
இதற்கிடையில், மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவின் செயல்கள் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், மும்பை அணி 2 பிரிவுகளாக பிரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவும், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவும் செயல்படுவதாக கூறப்பட்டது.
ஒரு புறத்தில் ஜஸ்பிரிட் பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும், இஷான் கிஷன் உள்ளிட்டோர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக செய்திகள் வெளியாகின. மேலும், அணியின் நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
மும்பை அணியில் இருந்து விலகும் ரோகித் சர்மா?
இந்நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்ஸியால், ரோகித் சர்மா கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, மும்பை அணிக்குள்ளே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, மும்பை அணி நிர்வாகத்தின் மோசமான அணுகுமுறையால், 2024 ஐபிஎல் தொடருக்கு பின், அணியில் இருந்து விலக ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மறுபுறத்தில், 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்த ஹர்திக் பாண்டியாவுக்கு, இன்னும் 2 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை, அந்த 2 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தனது திறனை நிரூபிக்கவிட்டால், கேப்டனை மீண்டும் மாற்ற மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: நரையை மறைக்க மருதாணிப்பொடியைப் பயன்படுத்தாதீர்கள்!
Rohit Sharma left from Mumbai Indians