இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பிரபல வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் வட்டு எறிதலில் தேசிய சாதனை படைத்தவர்.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் அறிமுகமாகி இறுதிப் போட்டியில் ஆறாவது இடம் பிடித்தார்.
ஊக்கமருந்து சோதனை!
கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி அவரிடம் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட ஸ்டானோசோலோல் என்ற ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானது.
இதனை கடந்த ஏப்ரல்11ஆம் தேதி கமல்பிரீத் கவுர் ஒப்புக் கொண்டதை அடுத்து கமல் பிரீத் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
மேலும் தொடர்ந்து கமல் பிரீத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஊக்கமருந்து எவ்வாறு அவரது உடலில் செலுத்தப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதேவேளையில் கமல்ப்ரீத் கவுரின் மாதிரிகள் சுவிட்சர்லாந்தின் லொசானில் உள்ள உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (WADA) அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டன.
மேலும் புது டெல்லியில் உள்ள தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தில் (NDTL) சோதனை செய்யப்பட்டது. இரண்டு சோதனையிலும் கமல்பிரீத் கவுர் ஸ்டானோசோலோல் என்ற தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை!
இந்நிலையில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து, தடகள ஒருமைப்பாடு பிரிவு (AIU) அறிவித்துள்ளது.
இந்த தடை காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2024 ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கமல்பிரீத் கவுர் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. .
சமீபத்தில் ஊக்கமருந்து தடையை எதிர்கொண்ட சக வட்டு எறிதல் வீராங்கனை நவ்ஜீத் கவுர் தில்லான், ஓட்டப்பந்தய வீராங்கனை தனலட்சுமி சேகர் மற்றும் கால் மைல் எம்.ஆர்.பூவம்மா ஆகிய இந்தியர்களின் பட்டியலில் தற்போது கமல்பீரித் கவுர் இணைந்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வீடு திரும்பும் போது சோகம் -ஓடும் பேருந்தில் தீ : 17 பேர் உயிரிழப்பு!
ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு!