T20 World Cup 2022 : தினேஷ் கார்த்திக்கை பார்த்து அசந்துபோன ஆஸ்திரேலிய ஜாம்பவான்! என்ன சொன்னார் தெரியுமா?

Published On:

| By Jegadeesh

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று (அக்டோபர் 22 ) முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இந்திய அணி நாளை (அக்டோபர் 23 ) பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோத இருக்கிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல காத்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் ரோகித் சர்மா தலைமையில் இந்தாண்டு பேட்டிங்கில் அசுர பலத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த முறை இந்திய அணியில் மிக முக்கியமான வீரராக சேர்ந்திருப்பவர் தினேஷ் கார்த்திக் தான்.

இந்திய அணியின் பலம்

சமீப காலமாகவே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் ஒரு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் நேற்று (அக்டோபர் 21 ) ஐசிசிக்கு அளித்துள்ள பேட்டியில் ”ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா அணி அவரை கழற்றிவிட்டதும் அவருடைய கிரிக்கெட் கரியரே முடிந்தது என்று நினைத்தேன்.

நினைக்காதது நடந்தது

ஆனால், அதன் பின்னும் தனது விடாமுயற்சியின் மூலம் மீண்டும் ஒரு பினிஷராக பெங்களூரு அணியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அவர் இப்படி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று நான் சற்றும் நினைக்கவில்லை.

கொல்கத்தா அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதால் அவருடைய கிரிக்கெட் நேரம் முடிவுக்கு வந்ததாக நினைத்தேன். ஆனால் இன்று அவர் இல்லாமல் இந்திய அணி விளையாடாது என்கிற நிலையை தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தால் உருவாக்கியுள்ளார்.

இந்திய வீரர்களிடம் பிடித்தது

இந்திய வீரர்களிடம் பிடித்த ஒன்றே விடாமுயற்சி தான். அந்த வகையில் தினேஷ் கார்த்திக் இந்த 37 வயதில் அவர் கொடுத்த கம்பேக் என்பது சாதாரண விஷயம் கிடையாது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இதனிடையே, ரிக்கி பாண்டிங்கிற்கு தினேஷ் கார்த்திக் நன்றி கூறியுள்ளார். மேலும் , அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘எனது விருப்பமான கிரிக்கெட் வீரர்களில் நீங்களும் ஒருவர் , மும்பை இந்தியன்ஸ் அணி உடனான காலத்தில் உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு சாம்பியன் மற்றும் விளையாட்டின் நுணுக்கமான நபர் நீங்கள். இந்த அழகான வார்த்தைகளுக்கு நன்றி ரிக்கி பாண்டிங் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆசியக் கோப்பை: ஜெய்ஷா கருத்துக்கு ரோகித் பதில்!

டி20 உலகக் கோப்பை: சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தொடங்குகிறது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel