ஆம்ஸ்டெர்டாமில் ரசிகர்கள் மீது தாக்குதல்… விமானத்தை கிளப்பிய இஸ்ரேல்

Published On:

| By Kumaresan M

genocidal song in Amsterdam

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

யூரோபா லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க  இஸ்ரேலின் மக்காபி டெல் அவிவ் அணி நெதெர்லாந்தின் ஆம்ஸ்ட்ராங் நகருக்கு சென்றுள்ளது.  அந்த அணியின் இஸ்ரேல் நாட்டு  ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் ஆம்ஸ்ட்ராங் நகருக்கு சென்றுள்ளனர்.  போட்டியின் போது, மைதானத்துக்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் நேற்று குழுமியிருந்துள்ளனர். அப்போது , சில இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீன கொடியை கிழித்து போட்டதாக தெரிகிறது. இதை பார்த்த முஸ்லிம் ரசிகர்கள் இஸ்ரேலிய ரசிகர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

அதே வேளையில் , தங்கள் நாட்டு  ரசிகர்களை திட்டமிட்டு தாக்கியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, தங்கள் ரசிகர்களை மீட்க உடனடியாக இரு பிரத்யேக விமானங்களை ஆம்ஸ்டர்டாம் நகருக்கு இஸ்ரேல் அனுப்பியது.

இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் மீடியாக்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் இஸ்ரேல் ரசிகர்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு பாலஸ்தீன ஆதரவாளர்கள் குழுவாக விரட்டி சென்று தாக்கியதாக கூறியுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .  போட்டிக்கு முன்னதாகவே மக்காபி டெல் அவிவ் ரசிகர்களுக்கும் பாலஸ்தீனிய ஆதுரவாளர்களுக்கும் இடையில் மோதலும் குழப்பமும் காணப்பட்டது .

காஸாவில் இறந்த குழந்தைகளைப் பற்றியும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அவதூறுகளையும் இனப்படுகொலை பற்றியும்  இஸ்ரேல் ரசிகர்கள் பாடலாக பாடியதாக சமூக ஊடகங்களில் வீடியோ பரவி வருகிறது. இஸ்ரேலிய ரசிகர்கள்தான் முதலில் வன்முறையில் ஈடுபட்டதாகவும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

போதைப்பொருள் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேச்சு : ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு!

போதைப்பொருள் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேச்சு : ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel