உச்சநீதிமன்றத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த சம்பத்குமார் ஐபிஎஸ் மீது தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2013 ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங்கில் தோனி ஈடுபட்டதாக ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியிருந்தார்.
இதனையடுத்து, தனது பெயர் மற்றும் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சம்பத்குமார் அவதூறு கருத்து தெரிவித்ததாகவும், தன்னை பற்றி கூறிய கருத்துகளை ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி 2014ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.
அதனையடுத்து, சம்பத் மற்றும் பிற தரப்பினர் தோனிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
எனினும் தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, 2021 டிசம்பரில் சம்பத் பிரமாண பத்திரிகை தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்றம் “சட்டத்தின் விதி” மீதான தனது கவனத்திலிருந்து விலகிவிட்டதாகவும், இதுபோன்ற வழக்கு மூலம் தனது குரலைக் கெடுக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து தோனி, ஐபிஎஸ் அதிகாரியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் அடுத்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
மணிப்பூர் கலவரம்: மதுரை கல்லூரி மாணவிகள் போராட்டம்!
’பீட்சா 4′ : அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!