இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் அக்டோபர் 5 அன்று துவங்கவுள்ளது. நவம்பர் 19 வரை நடைபெறவுள்ள இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மும்பை கிரிக்கெட் சங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2011 உலகக்கோப்பை தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா vs இலங்கை இறுதிப்போட்டியில், ‘Dhoni finishes off in style…”, என்ற வசனத்திற்கு இலக்கணமாக, ‘தல’ தோனி அடித்த வின்னிங் சிக்ஸ் சென்று விழுந்த 2 இருக்கைகளை, 2023 ஒருநாள் உலகக்கோப்பையை முன்னிட்டு ஏலம் விட உள்ளதாக மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள மும்பை கிரிக்கெட் வாரியம், “இந்த ஏலத்தின் மூலம் ஈட்டப்படும் நிதியை, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்” எனவும் அறிவித்துள்ளது.
நடைபெற உள்ள 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்த வான்கடே மைதானத்தில்,
- அக்டோபர் 21 அன்று இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா,
- அக்டோபர் 24 அன்று தென்னாப்பிரிக்கா vs வங்கதேசம்,
- நவம்பர் 2 அன்று இந்தியா vs இலங்கை,
- நவம்பர் 7 அன்று ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் என 4 லீக் சுற்று போட்டிகளும்,
- நவம்பர் 15 அன்று முதல் அரையிறுதி போட்டியும் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
முரளி
மின்கட்டண உயர்வு: திருப்பூரில் இருந்து முதல்வருக்கு பறந்த கடிதங்கள்!
30 நாட்களில் சொத்துப் பத்திரம்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ அதிரடி!