இவருக்கா 42 வயசாச்சு… தோனி பிடித்த சூப்பர்-மேன் கேட்ச்!

விளையாட்டு

ஐபிஎல் தொடரில், தனது 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து பிரிவுகளிலும் அபாரமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு சிவம் துபே 51 ரன்கள், ரச்சின் ரவீந்திரா & ருதுராஜ் கெய்க்வாத் தலா 46 ரன்கள் விளாசினர். இதன்மூலம், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் சேர்த்தது.

பின் 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு எதிராக, சிறப்பாக பந்துவீசிய தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதன்மூலம், குஜராத் அணியால் 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம், சென்னை அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறியது.

இந்நிலையில், 2வது இன்னிங்ஸில் சென்னை அணி பந்துவீசிக்கொண்டிருந்தபோது, அந்த அணிக்காக 8வது ஓவரை டெரில் மிட்சல் வீசினார். அப்போது, அவர் வீசிய 3வது பந்து, பேட்டிங் செய்துகொண்டிருந்த விஜய் சங்கர் பேட்டில் எட்ஜ் ஆகி கீப்பரை நோக்கி சென்றது. அந்த இடத்தில் இருந்த தோனி, சூப்பர்-மேன் போல தாவி அந்த கேட்சை பிடித்தார்.

இதன்மூலம், விஜய் சங்கர் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஃபெவிலியன் திரும்பினர். இந்நிலையில், தற்போது ‘தல’ தோனி பிடித்த சூப்பர்-மேன் கேட்ச்சின் வீடியோ, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வரும் தோனியின் ரசிகர்கள், “என்னது! அவருக்கா 42 வயசு ஆச்சுன்னு சொன்னீங்க”, என அவரின் கேட்சிற்கு தங்களது ஹார்ட்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த கேட்ச் குறித்த விளக்க படம் ஒன்றையும் வெளியிட்ட ஐபிஎல், மகேந்திர சிங் தோனி மொத்தமாக 2.27 மீட்டர்கள் தாவி இந்த கேட்சை பிடித்துள்ளதாக, அந்த படத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது, அவரின் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்போட்டியில், பீல்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கில்லி போலவே செயல்பட்டது. அது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

குறிப்பாக, தோனியை போலவே அஜின்கியா ரகானேவும் ஒரு அற்புதமான கேட்சை பிடித்து, டேவிட் மில்லரை வெளியேற்றினார். தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இவர்களை போலவே, இப்போட்டியில் ரச்சின் ரவீந்திராவும் 3 கேட்ச்களை பிடித்து அசத்தினார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒடிசாவில் ரூ.3,350 கோடிக்கு துறைமுகம் வாங்கும் அதானி

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *