IPL 2024: தொட்டதெல்லாம் தூள் பறக்குது… மீம்ஸ் போட்டு கொண்டாடும் ரசிகர்கள்!

விளையாட்டு

நேற்று (மார்ச் 31) விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் மோதின. முதல் வெற்றிக்காக டெல்லியும், மூன்றாவது வெற்றிக்காக சென்னை அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 191 ரன்களை குவித்தது. தொடர்ந்து சேஸிங் செய்த சென்னை அணியால் 2௦ ஓவர்கள் முடிவில் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் முதல் தோல்வியை சென்னை அணியும், முதல் வெற்றியை டெல்லி அணியும் பதிவு செய்துள்ளன.

சென்னை அணி தோல்வியைத் தழுவினாலும், நேற்றைய போட்டியில் 8-வது வீரராக களமிறங்கிய தோனி வெறும் 16 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். சந்தித்த முதல் பந்தினையே பவுண்டரிக்கு அனுப்பிய தோனி கடைசி பந்தை சிக்ஸருக்கு அனுப்பி, மேட்சை முடித்து வைத்தார்.

இதன் மூலம், ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் 1௦௦ சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்னும் பெருமை தோனிக்கு கிடைத்துள்ளது.

இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவினாலும் கூட, தோனியின் பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் ‘இது போதும் எங்களுக்கு’ என சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதில் இருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெப்பம் குளிர் மழை: விமர்சனம்!

கச்சத்தீவு விவகாரம்: காங்கிரஸ், திமுக மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

GOLD RATE: சரட்டென எகிறிய விலை… அந்த பக்கம் போகாதீங்க!

தமிழகமும் போதையும்… மோடி காட்டம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *