ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணி நிர்வாகமும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்வது என்பது தொடர்பான விதிகளை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளது. ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், மூன்று ஆர்டிஎம் கார்டு வசதிகளை வழங்க அணி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், பிசிசிஐ மொத்தமாகவே ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, ஆர்டிஎம் கார்டு வசதியை பிசிசிஐ ரத்து செய்யப் போவதாக சொல்லப்படுகிறது. 5 வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும் முறை வந்தால் அதில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் என்கிற விஷயமும் அடங்கியுள்ளது.
ஆர்.டி.எம். என்பது கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர் ஒருவரை வேறு எந்த அணி வாங்கினாலும் அதை தட்டி பறிக்கும் உரிமை பழைய அணிக்கு உண்டு என்பதாகும்.
ஆர் டி எம் கார்டு வசதி இல்லை என்றால் சிஎஸ்கே அணி தோனியை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்றே கூறப்படுகிறது. ஆர் டி எம் கார்டு இருக்கும் நம்பிக்கையில் தங்களுடைய வீரர்களை வேறு எந்த அணியும் தேர்வு செய்தால், ஆர்டிஎம் பயன்படுத்தி மீண்டும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே இருந்தது. தற்போது, அந்த உரிமை பறி போனதாக சொல்லப்படுகிறது.
தோனி அடுத்த சீசனில் விளையாடுவேன் என உறுதி அளித்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி தோனியை எடுக்கும். அனால், தோனி அதை ஏற்றுக் கொள்வரா என்பது தெரியவில்லை.
ஆர்டிஎம் இல்லையென்றால், தனக்கு பதில் வேறு ஒரு இளம்வீரரை தேர்வு செய்யுங்கள் என்று தோனி சொல்லவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் தோனி 2025 சீசனில் சென்னைக்காக விளையாடுவரா? என்பது கேள்விக்குறியதாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் கொடுத்த சர்டிபிகேட் சர்ச்சை… செந்தில்பாலாஜிக்கு என்ன துறை?
ஓடும் காரை மறித்து தங்கம் கொள்ளை… கோவைக்கு வந்த வழியில் பட்டப்பகலில் துணிகரம்!