IPL 2024 : ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற 34-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
லக்னோ அணியின் சொந்த மைதானமான ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.
ஓப்பனிங் பேட்ஸ்மேன் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா டக் அவுட் ஆக, அடுத்த வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்(17), ஷிவம் துபே(3), சமீர் ரிஸ்வி(1) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் சென்னை அணியின் ஸ்கோர் 150 தாண்டுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
𝙎𝙞𝙢𝙥𝙡𝙮 𝙞𝙣𝙘𝙧𝙚𝙙𝙞𝙗𝙡𝙚!
MS Dhoni smacks a 1⃣0⃣1⃣ metre SIX into the stands 💥
Lucknow is treated with an entertaining MSD finish 💛
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #LSGvCSK | @msdhoni | @ChennaiIPL pic.twitter.com/XIT3O43l99
— IndianPremierLeague (@IPL) April 19, 2024
கடைசி ஓவர்களில் களமிறங்கிய தோனி 9 பந்துகளை எதிர் கொண்டு அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 28 ரன்கள் குவித்தார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
டி காக் – கே.எல்.ராகுல் ஜோடி அபாரம்!
தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களான குயின் டன் டிக்காக் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் தொடங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே பொறுமையாக ஆடியதுடன், அடிக்கடி சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சருக்கு விளாசி மிரட்டினர்.
பவர் பிளேவில் லக்னோ அணி 54 ரன்கள் சேர்த்த நிலையில், இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் சென்னை பவுலர்கள் தவித்த நிலையில், 15 வது ஓவரின் முதல் பந்தில் அரை சதம் கண்ட டி காக்,(54) அதே ஓவரின் கடைசி பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்மூலம் சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் (134) குவித்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையை டி காக் – கே. ராகுல் பெற்றது.
ஆனால் இந்த விக்கெட் மூலம் லக்னோ அணிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆட்டத்தின் 18வது ஓவரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 82 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையிலும்,
அடுத்த களமிறங்கிய நிக்கோலஸ் பூரண் 19வது ஓவரில் கடைசி பந்தில் பவுண்டரிக்கு பந்தை தட்டிவிட்டு அணி வெற்றிபெற செய்தார்.
இதன்மூலம், 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்த, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்த நெலம் சிக்குமா? : அப்டேட் குமாரு
புதுச்சேரியில் சிக்கிய ரூ.4.9 கோடி பணம் : காப்பாற்ற முயன்ற அதிகாரி… காட்டி கொடுத்த நாய்கள்!