சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் சாக்ஷி இருவரும் தங்களது 15ஆம் ஆண்டு திருமண நாளை இன்று (ஜூலை 4) கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. ஐசிசியின் 3 கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள அவர், ஐபிஎல் தொடரில் 5 முறை சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற வைத்துள்ளார்.
நடந்து முடிந்த 2024 ஐபிஎல் போட்டியில் தனது கேப்டன்சி பொறுப்பை சக அணி வீரரான ருத்துராஜிடம் ஒப்படைத்தார். தொடரில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
அதனைத்தொடர்ந்து தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் தோனி இன்று தனது 15ஆம் ஆண்டு திருமண நாளை இன்று (ஜூலை 4) கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸிவா என்ற பெண் குழந்தை உள்ளார்.
இந்நிலையில், தோனி தனது 15ஆம் ஆண்டு திருமண நாளை இன்று மனைவி சாக்ஷியுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இன்று திருமண நாள் கொண்டாடும் தோனி-சாக்ஷி தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரிட்டன் விருதை வென்ற தமிழ் முன்னணி நடிகரின் திரைப்படம்! – ரசிகர்கள் குஷி!
இது முதல்முறை : பிரிட்டன் பொதுத்தேர்தலில் போட்டியிடும் 8 தமிழர்கள்!