சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை வாங்கியதை வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் வரவேற்றுள்ளார்.
கொச்சியில் இன்று( டிசம்பர் 23) நடைபெற்று வரும் 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அனுபவமிக்க இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு எடுத்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அவரை அணிக்கு வரவேற்று சமூகவலைதளத்தில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியுடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் ரைசிங் புனே சூப்பர் ஜியாண்ட்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அந்த தொடரில் புனே அணி இறுதிபோட்டி வரை சென்றது.
தற்போது சிஸ்கே அணியில் தான் வாங்கப்பட்டதும் மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக மஞ்சள் நிறத்தில் புகைப்படம் ஒன்றை பென் ஸ்டோக்ஸ் ட்வீட் செய்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸை சென்னை அணி வாங்கியதை அதிரடிக்கு பெயர்போன கிறிஸ் கெயில் வரவேற்று பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “சிஎஸ்கேயில் ஆல்-ரவுண்டர்கள் இல்லை. பென் ஸ்டோக்ஸை இரு கைகளாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பென் ஸ்டோக்ஸின் வருகை பெரும் பலத்தை சேர்க்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் இணைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைவார். எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தோனி தலைமையின் கீழ் விளையாடவே விரும்புவார்கள். ஏனென்றால், தோனியை அனைவரும் விரும்புகிறோம்.
தோனியும், பென் ஸ்டோக்ஸும் அற்புதமான வீரர்கள். இவர்களின் கூட்டணி அணிக்கு வெற்றியை பெற்றுத் தரும். தோனியின் விருப்பத்தை ஒரு வீரராக ஸ்டோக்ஸ் நிறைவேற்றி தருவார். அதேவேளையில் இளம் வீரர்களும் ஸ்டோக்ஸிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வார்கள்.” என்று கெய்ல் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸுடன், ரகானே(ரூ.50 லட்சம்),, கைல் ஜேமிஷன்(ரூ.1 கோடி), நிஷாந்த் சிந்து(ரூ.60 லட்சம்), ஷைக் ரஷீத்(ரூ.20 லட்சம்) ஆகியோரை எடுத்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கால்பந்து நாயகன் மெஸ்சி: கெளரப்படுத்திய ரசிகர்கள்!
ஐபிஎல் வரலாற்றில் இமாலய சாதனை படைத்தார் சாம் கர்ரன்