2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமையை தோனி தலைமையிலான சிஎஸ்கே பெற்றுள்ளது. இந்த அணிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது.
இந்நிலையில் வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே அணிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
நேற்றைய போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6 ரன்கள் மற்றும் 4 ரன்கள் அடித்து வெற்றி பெற காரணமாக இருந்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின்
“ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5ஆவது ஐபிஎல் கோப்பையை வென்ற மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள். நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்”.
பாஜக தலைவர் அண்ணாமலை
“கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்”
அமைச்சர் உதயநிதி
“ஐந்தாவது முறை கோப்பையை வென்றிருக்கிறது சிஎஸ்கே. சிறந்த கேப்டன்சி. ஜடேஜாவின் அசத்தலான ஃபினிஷ்.”
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
“5ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே தோனிக்கு வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மேலும் பல கோப்பைகளை வெல்ல வாழ்த்துக்கள்”
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமிடங்களில் பிபி மாத்திரை போட வைத்த போட்டி.. வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது. ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி! தோனி ஒரு சகாப்தம்!
திரை பிரபலங்கள் த்ரிஷா, வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரியா
நெல்லை: சினிமாவை மிஞ்சிய கொள்ளை சம்பவம்!
‘வெறித்தனம்’ : கொண்டாடி தீர்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!