பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே இந்த ஆண்டின் முதல் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணி 2டெஸ்ட் மற்றும் 3ஒருநாள் தொடரில் பங்கேற்க பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் உள்ள நேஷனல் மைதானத்தில் இன்று(ஜனவரி 2) தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அளித்தனர்.
இருவருமே அரைசதம் அடித்த நிலையில் முதல் விக்கெட்டுக்கு 134 ரன்களை குவித்தனர். இந்நிலையில் 71ரன்களில் டாம் லேதம் ஆட்டமிழந்தார்.
கான்வே சாதனை
எனினும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய டெவான் கான்வே டெஸ்ட் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார்.
இது 2023ம்ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதமாக பதிவாகியுள்ளது.
சர்வதேச அளவில் 2022ம் ஆண்டில் முதல் சதத்தை பங்காளதேஷ் அணிக்கு எதிராக பதிவு செய்தார் டெவான் கான்வே.
இதன்மூலம் தொடர்ந்து 2ஆண்டாக முதல் சதத்தை பதிவு செய்தவர் என்ற பெருமையை டெவான் கான்வே படைத்துள்ளார்.
இதனையடுத்து டெவான் கான்வே 122ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அதன்பிறகு ஆடிய கேன் வில்லியம்சன் 36 ரன்களும், ஹென்ரி நிகோல்ஸ் 26 ரன்களும் அடித்தனர். டேரைல் மிட்செல்(3) மற்றும் பிரேஸ்வெல்(0) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர்.
டாம் பிளண்டெல் 30ரன்களுடனும், இஷ் சோதி 11ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 309ரன்கள் அடித்துள்ளது நியூசிலாந்து அணி.
கிறிஸ்டோபர் ஜெமா
“அதிமுகவை சீண்ட வேண்டாம்” : அன்புமணிக்கு ஜெயக்குமார் காட்டமான பதில்!
”போலீசுக்கே இந்த நிலையா”?: டிடிவி தினகரன்