சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து, விலகி இருக்கிறார்.
2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி 4 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது.
கடந்தாண்டு ஓபனராக களமிறங்கி அதிரடியாக ஆடிய டெவன் கான்வே, இந்த ஆண்டு காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் தற்போது அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை அணி இங்கிலாந்து நாட்டின் ரிச்சர்ட் கிளீசன் என்னும் 36 வயது பவுலரை அணியில் சேர்த்துள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
வங்காள தேசம் வீரரான முஸ்தபிசுர் ரஹ்மான் மே 1 முதல் சென்னை அணியில் இருக்க மாட்டார். எனவே அவருக்குப் பதிலாக ரிச்சர்ட்டை சென்னை அணி எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
Welcoming with a glee!🤩🥳
Whistle Vanakkam, Richard! 🦁💛
🔗 – https://t.co/7XCuEZCm21 #WhistlePodu #Yellove pic.twitter.com/rJa1HilaQ6— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2024
ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாளை (ஏப்ரல் 19) மாலை 7.3௦ மணிக்கு கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி லக்னோவின் ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறுகிறது. லக்னோவின் சொந்த மைதானம் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : சத்யபிரதா சாஹு
நடிகர் அஜித் மகளா இது?.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!
இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ‘டெலிட்’ செய்த யுவன்?… ரசிகர்கள் அதிர்ச்சி..!