SRH vs DC : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்று வரும் 35வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
6 ஓவரில் 125 ரன்கள்!
இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸ் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களை குவித்தனர். அதனையடுத்து 2வது ஓவரில் 21 ரன்கள், 3வது ஓவரில் 22 ரன்கள், 4வது ஓவரில் 21 ரன்கள், 5வது ஓவரில் 20 ரன்கள் என முதல் 5 ஓவர்களில் 100 ரன்கள் குவித்தனர்.
தொடர்ந்து 6வது ஓவரிலும் 22 ரன்கள் எடுக்க, ஹெட் -அபிஷேக் ஜோடி அணி பவர் பிளே முடிவில் 125 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்கள்) அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது.
https://twitter.com/Scentofawoman10/status/1781695805705126398
7வது ஓவரில் அபிஷேக் சர்மா 46 ரன்னிலும், மார்க்ரம் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து 9வது மற்றும் 10வது ஓவரில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹெட் 89 ரன்களிலும், கிளாசென் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
10 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழந்தாலும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த அணியின் ஸ்கோரில் எந்த மாற்றமும் இல்லை.
அதிகபட்ச ஸ்கோர்!
5வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஷபாஸ் அகமது ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 37 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய அப்துல் சமத் 13 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 1 ரன்னிலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
மறுபுறம் அதிரடியாக ஆடிய ஷபாஸ் அகமது அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது ஐதராபாத்.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை (3) 250+ ஸ்கோர் செய்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
மேலும் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்(22) அடித்த போட்டியாகவும் இது அமைந்தது.
டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அக்சர் படேல் தவிர அந்த அணியின் மற்ற வீரர்கள் ஒரு ஓவருக்கு சராசரியாக 15 ரன்கள் வாரி வழங்கியுள்ளது.
இதனையடுத்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.
அந்த அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தடைகளை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்
தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் : எங்கு குறைவு? எங்கு அதிகம்? – முழு விவரம்!