ipl 2023 GTvsDC

திக் திக் நிமிடங்கள்: டெல்லி அணி த்ரில் வெற்றி!

விளையாட்டு

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது டெல்லி அணி.

ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் நேற்று (மே 2) இரவு நடைபெற்ற போட்டியில் டெல்லி – குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள மோதி மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஃபிலிப் சால்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலேயே ஃபிலிப் சால்ட்டை டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகமது ஷமி. அதன்பின்னர் கேப்டன் டேவிட் வார்னரும் 2 ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய ரைலீ ரூசோ 8 ரன்களில், மனீஷ் பாண்டே 1 ரன் மற்றும் பிரியம் கர்க் 10 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவர்கள் மூவரின் விக்கெட்டுகளையும் குஜராத் அணியில் முகமது ஷமி வீழ்த்தி அசத்தினார்.

இதனால் பவர்பேளே ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி திணறியது. அனால் அடுத்ததாக விளையாடிய அமான் கான் – அக்சர் படேல் ஜோடி பொறுப்பாக விளையாடித் துவண்டு போன டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அக்சர் படேல் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய அமான் கான் அரைசதம் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். ரிப்பல் படேல் 13 பந்தில் 23 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.

இதனால் 131 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குஜராத் வீரர்கள் களமிறங்கினர். ஆனால் ரிதிமான் சஹா(0), ஷுப்மன் கில்(6), விஜய் சங்கர்(6), டேவிட் மில்லர்(0) ஆகியோர் ஏமாற்றமளிக்க, 32 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ipl 2023 GTvsDC

தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த அபினவ் மனோகர் 26 ரன்கள் அடித்து, 5வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார். ஆனால் மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்தில் 26 ரன்கள் மட்டுமே அடித்தார் அபினவ் மனோகர்.

ஒருபுறம் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 17 ஓவரில் குஜராத் அணி 94 ரன்கள் அடித்திருந்த நிலையில், 18வது ஓவரை வீசிய கலீல் அகமது, அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அபினவ் மனோகரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

19வது ஓவரை அன்ரிக் நோர்க்யா வீச, முதல் 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஆனால் அந்த ஓவரின் கடைசி 3 பந்தில் ராகுல் டெவாட்டியா 3 சிக்ஸர்கள் அடிக்க, கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே குஜராத் டைட்டன்ஸுக்கு தேவைப்பட்டது.

இதனால் மிகவும் த்ரில்லான ஆட்டமாக குஜராத் – டெல்லி இடையேயான ஆட்டம் மாறியது. கடைசி ஓவரில் பந்து வீசிய இஷாந்த் சர்மா 2,1,0,0,2,1 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அருமையாக செயல்பட்டார். இதனால் திக் திக் நிமிடங்களாக மாறிய நேற்றைய ஆட்டத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி அணி.

ipl 2023 GTvsDC

இதனையடுத்து இன்று (மே 30) மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் லக்னோ – சென்னை மற்றும் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதவிருக்கின்றன.

மோனிஷா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் கபாப்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *