டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டிற்கு ரூபாய் 24 லட்சம் அபராதத்துடன், ஒரு போட்டியில் விளையாடவும் பிசிசிஐ தடை விதித்துள்ளது.
கார் விபத்தில் இருந்து, நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டுவந்த இளம்வீரர் ரிஷப் பண்ட் தற்போது கேப்டனாக இந்த சீசனில் டெல்லி அணியை வழிநடத்தி வருகிறார்.
அவரின் தலைமையில் டெல்லி அணி சென்னை அணிக்கு எதிராக, ஒரு வெற்றியும் கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வியையும் தழுவியுள்ளது.
இந்தநிலையில் பிசிசிஐ ரிஷப்பிற்கு ரூபாய் 24 லட்சம் அபராதத்துடன், ஐபிஎல் போட்டி ஒன்றில் விளையாடவும் தடை விதித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக பந்துவீசிட டெல்லி அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டதே இதற்கு காரணம் ஆகும்.
ஐபிஎல் போட்டி ஒன்றில் விளையாட கேப்டன் ரிஷப் பண்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இது டெல்லி அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கொல்கத்தா அணிக்கு எதிராக 1௦6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ள நிலையில், தற்போது இந்த அபராதம் மற்றும் தண்டனை இரண்டுமே டெல்லி அணிக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மாறியுள்ளது.
Video: இப்படி சொதப்பிருச்சே… திருமண வீடியோவால் அப்செட்டான டாப்சி
இது மட்டுமின்றி இம்பாக்ட் பிளேயர் உட்பட டெல்லி வீரர்கள் அனைவருக்குமே ரூபாய் 6 லட்சம் அல்லது ஊதியத்தில் 25% அபராதம் பிசிசிஐ-யால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டில் எது குறைவாகவோ உள்ளதோ அதனை அபராதத் தொகையாக வீரர்கள் அளிக்க வேண்டும்.
டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியை, அதன் சொந்த மைதானமான வான்கடேவில் வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி எதிர்கொள்கிறது.
முன்னதாக சென்னை அணிக்கு எதிராக பந்துவீச தாமதம் ஆனதால், கேப்டன் ரிஷப் பண்டிற்கு அந்த போட்டியில் ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்… அச்சத்தில் மக்கள்: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்!
பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர் கட்டாயம்: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!
ஆர்.எஸ்.எஸ்.சுக்கே சவால் விட்ட அண்ணாமலை: கோவையில் நடப்பது என்ன?