பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4வது போட்டியில், உ.பி வாரியர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணியும் மோதிக்கொண்டன. DC vs UPW WPL 2024 Highlights
இந்த இரண்டு அணிகளுமே இந்த தொடரில் தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், முதல் வெற்றியை நோக்கி களமிறங்கியது.
முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணியின் கேப்டன் மெக் லேன்னிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, பேட்டிங் செய்ய வந்த உ.பி வாரியர்ஸ் அணிக்கு, தனது மிரட்டலான பந்துவீச்சால் மரிசேன் காப் ஒரு அற்புதமான வரவேற்பை வழங்கினார்.
கேப்டன் அலைசா ஹீலி, வ்ரிந்தா தினேஷ் மற்றும் தஹிலா மெக்ராத் ஆகியோர் இவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து ஃபெவிலியன் திரும்ப, முதல் 6 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை இழந்து, உ.பி வாரியர்ஸ் அணி மோசமான நிலைக்கு சென்றது.
பின், தாக்குதலுக்கு வந்த ராதா யாதவ் தனது பங்கிற்கு அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்த, உ.பி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அந்த அணிக்காக ஸ்வேதா ஷெராவத் மட்டும் 45 ரன்களை சேர்த்திருந்தார். மரிசேன் காப் 3 விக்கெட்களையும், ராதா யாதவ் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து, 120 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் மெக் லேன்னிங் மற்றும் சபாலி வர்மா முறையே 51(43) மற்றும் 64(43) ரன்கள் விளாச,
15வது ஓவரிலேயே இலக்கை எட்டிய அந்த அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
The @DelhiCapitals register their maiden victory of #TATAWPL 2024 🙌
A splendid run-chase produces a 9-wicket win for #DC 💪
Match Centre 💻📱https://t.co/YnKaBW7IeD#UPWvDC pic.twitter.com/zWHEAu98c3
— Women's Premier League (WPL) (@wplt20) February 26, 2024
இந்த ஆட்டத்தில், 4 ஓவர்களில் 1 மெய்டன் ஓவர் உட்பட வெறும் 5 ரன்களை மட்டுமே வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்திய மரிசேன் காப், ‘ஆட்ட நாயகி’ விருதை வென்றார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஜாபர் சாதிக் கூட்டாளிகளை விசாரிக்காதது ஏன்?” – அண்ணாமலை கேள்வி!
ஆப்பிள் இறக்குமதி: பாதிக்கப்படும் இந்திய விவசாயிகள்!
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை!
ஹெல்த் டிப்ஸ்: பூக்களால் அலர்ஜியா? சமந்தா சொல்வது நிஜமா?
DC vs UPW WPL 2024 Highlights