5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர், பெங்களூரில் இன்று (பிப்ரவரி 23) தொடங்குகிறது .
மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இதன் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், ஷாகித் கபூர், கார்த்திக் ஆர்யன், வருண் தவான், டைகர் ஷெராப் ஆகியோர் கலந்துகொண்டு ஆடல்-பாடல் என, ரசிகர்களை அசத்தவிருக்கின்றனர்.
KING KHAN is all set for #TATAWPL Opening Ceremony 💥🔥💥
Hurry 🆙 and get your tickets at https://t.co/jP2vYAWukG @iamsrk pic.twitter.com/7VDjZ1dRw4
— Women's Premier League (WPL) (@wplt20) February 22, 2024
ஆடவருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று, பெண்களுக்கான பிரிமீயர் லீக் போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியது . Mumbai Indians Delhi capitals WPL 2024
இன்று தொடங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் முதல் 11 லீக் ஆட்டங்கள் பெங்களூரின் சின்னசாமி மைதானத்திலும், அடுத்த 9 ஆட்டங்கள் மற்றும் வெளியேற்றுதல் சுற்று , இறுதிப்போட்டி ஆகியவை டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் என மொத்தம் 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம்பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்திக்கும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.
மொத்தமாக 22 ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் இரவு 7.3௦ மணிக்கு போட்டி தொடங்கும். போட்டிக்கான பரிசுத்தொகை ரூபாய் 10 கோடியாகும்.
இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூபாய் 6 கோடியும், 2-வது இடத்தினை பிடிக்கும் அணிக்கு ரூபாய் 3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியினை எதிர்கொள்கிறது. டெல்லி அணியின் கேப்டனாக மெக் லானிங்கும், மும்பை அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத்தும் உள்ளனர்.
இரண்டு அணிகளுமே வலுவாகத் திகழ்ந்தாலும், இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 ஆட்டங்களில் இரண்டில் மும்பை அணி வெற்றியை ருசித்துள்ளது.
இதனால் இன்றைய ஆட்டம் ஒருதலைப்பட்சமாக செல்லுமா? இல்லை டெல்லி அணி மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசிக்குமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– இரசிக பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெயம் ரவி இல்லாமல் நடைபெற்ற ‘தனி ஒருவன் 2’ பட பூஜை… காரணம் என்ன?
அடுத்தடுத்து ரெய்டு… தமிழ்நாட்டு நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 2
திமுக மா.செ.க்கள் கூட்டம்: ஸ்டாலின் பேசியது என்ன?
Mumbai Indians Delhi capitals WPL 2024