DC vs RR: வெற்றி பெற்ற டெல்லி… சுவாரஸ்யமடையும் ஐபிஎல் 2024…

விளையாட்டு

DC vs RR: 2024 ஐபிஎல் தொடரில் இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ள நிலையில், இந்த தொடர் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரின் 56வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி, பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே போதும் என்ற நிலையில் உள்ளது.

ஆனால், மறுமுனையில் தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள, இப்போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் டெல்லி அணி களமிறங்கியது.

இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து, டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜாக் பிரஷர்-மெக்கர்க் 20 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அதிரடி துவக்கம் அளித்தார்.

இவரின் விக்கெட்டை தொடர்ந்து, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் (1 ரன்), அக்சர் பட்டேல் (15 ரன்கள்), ரிஷப் பண்ட் (15 ரன்கள்) என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஆனால், மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் போரல் 36 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.

பின் கடைசியில், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் விளாச, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணிக்காக, அஸ்வின் 4 ஓவர்களில் வெறும் 24 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

இதை தொடர்ந்து, 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 ரன்கள்) மற்றும் ஜோஸ் பட்லர் (19 ரன்கள்) பெரிதாக சோபிக்காமல் ஃபெவிலியன் திரும்பினர்.

பின் களமிறங்கிய சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த ரியான் பராக், சில அதிரடி ஷாட்களால் நம்பிக்கை அளித்தாலும், அவரும் 27 ரன்களுக்கு அட்டமிழந்து வெளியேறினார். மறுமுன்னையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன், 8 பவுண்டரி, 6 சிக்ஸ்களுடன் 46 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஆனால், அடுத்து வந்த யாரும் அதிரடி காட்டாததால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கிறது.

டெல்லி அணிக்காக, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி, அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

டெல்லி அணியின் இந்த வெற்றி மூலம், இந்த 2024 ஐபிஎல் தொடர் மேலும் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது.

– மகிழ்

ஜெயக்குமார் தனசிங் மரணம் : போலீசிடம் வாக்குமூலம் கடிதம் கொடுத்த தங்கபாலு

கெஜ்ரிவால் வழக்கு… அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்… காரசார வாதங்கள்… உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *