ஏலத்தில் எடுக்கப்பட்ட ட்ராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து சொல்ல முயன்ற ஆஸ்திரேலிய வீரரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளாக் செய்துள்ளது.
2023-ம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கேப்டன் பேட் கம்மின்ஸ், ட்ராவிஸ் ஆகிய 2 இரண்டு வீரர்களுக்கு மட்டுமே சுமார் 27.30 கோடி ரூபாய் கொடுத்து ஹைதராபாத் அணி வாங்கி இருக்கிறது.
SRH have blocked David Warner from Twitter/X and Instagram. pic.twitter.com/ZH3NSQ3yzV
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 19, 2023
மற்றொரு நட்சத்திர வீரரான மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூபாய் 24.75 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்னும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவருமான வார்னரை அந்த அணி பிளாக் செய்துள்ளது.
ஹெட், கம்மின்ஸ் ஆகியோருக்கு வாழ்த்து சொல்ல முயன்ற டேவிட் வார்னர் ஹைதராபாத் அணியால் எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் பிளாக் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் சன் ரைசர்ஸின் இந்த செயலை டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
IPL2024: சென்னையுடன் மீண்டுமொரு உரசல்… ரூ. 20.50 கோடி கொடுத்து கேப்டனையும் வாங்கியது ஹைதராபாத்!
அன்று விலை போகாத வீரர்… இன்று ரூ.14 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே! : யார் அவர்?