IPL 2024 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 14) நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 29வது லீக் போட்டியில் ‘எல் கிளாசிகோ’ எனப்படும் சென்னை- மும்பை அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கவீரராக ரச்சின் ரவீந்திராவுடன் வழக்கமாக களமிறங்கும் கேப்டன் ருதுராஜுக்கு பதிலாக அஜிங்கியா ரஹானே களம் கண்டார்.
ஆனால் இந்த மாற்றம் அணிக்கு அடியாக விழுந்தது. 8 பந்துகளை சந்தித்த ரஹானே வெறும் 5 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய ருதுராஜ் சிறிது அதிரடி காட்ட சென்னை அணி பவர் பிளேயில் 48 ரன்கள் குவித்தது.
எனினும் அதிரடியாக ஆட முயற்சித்த ரச்சின், ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த கையோடு அடுத்த பந்திலேயே 21 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த ருதுராஜ் – ஷிவம் துபே ஜோடி விக்கெட் விழாமல் விளையாடியதோடு, அதிரடியாகவும் பேட்டை சுழற்றியது.
இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் குவித்த நிலையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 69 ரன்கள் சேர்த்த நிலையில் மும்பை கேப்டன் ஹர்திக் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதற்கிடையே ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய துபே 27 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுபுறம் டேரில் மிட்செல்(17) கடைசி ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆட்டத்தில் மீதம் 4 பந்துகள் இருக்க ரசிகர்களின் ஆரவாரத்துடன் களமிறங்கிய தோனி, கொஞ்சமும் அசராமல் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு மொத்தம் 20 ரன்கள் குவித்தார்.
DO NOT MISS
MSD 🤝 Hat-trick of Sixes 🤝 Wankhede going berserk
Sit back & enjoy the LEGEND spreading joy & beyond 💛 😍
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #MIvCSK | @msdhoni | @ChennaiIPL pic.twitter.com/SuRErWrQTG
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது.
மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனையடுத்து 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி தற்போது விளையாடி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”ஸ்டெர்லைட் ஆலைக்கு 86 ஏக்கர் நிலம் கொடுத்தது திமுக தான் ”: எடப்பாடி குற்றச்சாட்டு!
CSK vs MI: முக்கிய வீரர் காயத்தால் அவதி… என்ன செய்யப்போகிறது சென்னை?
Whistle Podu: தளபதியின் தமிழ் புத்தாண்டு ட்ரீட்… படத்தின் கதை இதுதானா?