CSKvsKKR : Jadeja and tushar completely dismisses KKR

CSKvsKKR : முதல் பந்திலேயே மிரட்டிய துஷார்… கேகேஆர்-ஐ மொத்தமாக சுருட்டிய ஜடேஜா

விளையாட்டு

IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களுக்கு சுருண்டது.

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்று வரும் 22ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியும், கேகேஆர் அணியும் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது கொல்கத்தா அணி.

ஆனால் ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே தொடக்க வீரர் பிலிப் சால்ட்டின் விக்கெட்டை கைப்பற்றி மிரட்டினார் துஷார் தேஷ்பாண்டே.  இதன் மூலம் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 3ஆவது சிஎஸ்கே வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதனால் ஏற்பட்ட நெருக்கடிக்கு இடையே சுனில் நரைனுடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி  அதிரடியாக விளையாடினார். இதனால் பவர்பிளே முடிவில் (முதல் 6 ஓவர்கள்) அந்த அணி 56 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் தான் 7ஆவது ஓவரை வீச வந்தார் ரவீந்திர ஜடேஜா. அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஸ்வீப் அடிக்க முயற்சித்த அங்கிரிஷ் ரகுவன்ஷி (24) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அதேபோல அந்த ஓவரின் கடைசி பந்தில் சுனில் நரைன்(27) தூக்கி அடிக்க முயற்சித்து தீக்‌ஷனாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து 9ஆவது ஓவரை வீச வந்த ஜடேஜா, அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயரின் (3) விக்கெட்டை கைப்பற்றினார்.

64 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் களமிறங்கிய  அதிரடி பேட்ஸ்மேன்களான ரமன்தீப் சிங்ப் (13), ரிங்கு சிங்(9), ரஸல்(10) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

மறுபுறம் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளித்து விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் (34) விக்கெட்டை கடைசி ஓவரில் முஸ்தபிஷுர் கைப்பற்றினார்.

அதே ஓவரில் ஸ்டார்க்கும் டக் அவுட் ஆகி வெளியேற, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே குவித்தது.

சென்னை அணி தரப்பில் ஜடேஜா மற்றும் துஷார் 3 விக்கெட்டுகளும், முஸ்தபிஷுர் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Image

இதன்மூலம் நடப்பு தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய முஸ்தபிஷூர் மீண்டும் பர்ப்பிள் தொப்பியை தன் வசம் கொண்டு வந்தார்.

இதனையடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மக்களவை தேர்தல் : ஐந்து இடங்களில் இருந்து 10,214 பேருந்துகள் இயக்கம்!

முகமறியா மனிதர்களின் உதவி… : விபத்தில் சிக்கிய இயக்குநர் கே.எஸ். தங்கசாமியின் பதிவு!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *