சென்னை சேப்பாக்கத்தில் வரும் 12ம் தேதி நடைபெற இருக்கும் சிஎஸ்கே – ஆர்ஆர் அணிகளின் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க நீண்ட வரிசையில் விடிய விடிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கிய 16வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது.
எனினும் அதன்பின்னர் நடைபெற்ற லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக அபாரமாக விளையாடி சிஎஸ்கே அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து வரும் 12ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை தொடங்கியுள்ளது.
அதனை வாங்குவதற்காக நேற்று இரவு முதலே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தற்போது டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. அதனை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்து வரும் நிலையில் போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா