‘தல’ தப்பியது … இறங்கி வந்த பிசிசிஐ… சிஎஸ்கே நிம்மதி!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகிகளுடன் பிசிசிஐ ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தது. மெகா ஏலம் சார்ந்தும் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது சார்ந்தும் விவாதம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் சென்னை அணியின் சார்பில், ‘சர்வதேசப் போட்டிகளில் ஆடி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட வீரர்களை ‘Uncapped’ வீரர்களாக கருத வேண்டும்.’ என்கிற விதிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகின்றது.

2021 வரைக்கும் ஐ.பி.எல் தொடரில்  அப்படியொரு விதிமுறை இருந்தது. அந்த விதி பிறகு நீக்கப்பட்டது. ஆனால்,தோனியை ஐ.பி.எல் தொடரில் ஆட வைக்கும் முனைப்பில் பிசிசிஐ இந்த விஷயத்தில் விட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதனால், சென்னை அணி uncapped வீரராக  தோனியை 4 கோடி கொடுத்து வாங்கவுள்ளது. தற்போது, 42 வயதான தோனி ஏலத்தில் வாங்கப்பட்டால் அவரால் அடுத்த 3 சீசன்களுக்கும் விளையாட முடியாத சூழல் ஏற்படும்.

அதே வேளையில், அன்கேப்டு என்றால் 4 கோடி கொடுத்தால் போதுமானது. Uncapped வீரர் விதிமுறை என்பது தோனியின் சம்மதத்தோடுதான் சென்னை அணியால் பிசிசிஐக்கு வைக்கப்பட்ட கோரிக்கை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏனென்றால் ,தனக்கு கொடுக்கப்படும் தொகையை விட, அந்த பணத்தில் மற்ற வீரர்களை வாங்கி சென்னை அணி வலுவாக இருக்க வேண்டுமென்றுதான் அவர் கருதுவார்.  இதனால், தோனிக்கு கொடுக்கப்படும் தொகையை மற்ற வீரர்களை வாங்க சென்னை அணி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் தோனி 12 கோடிக்கும் ரவீந்தர ஜடேஜா 16 கோடிக்கும் சென்னை அணியால் வாங்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் ஜூலை மாதம் தோனி 43 வயதை எட்டுகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவருக்கு மூட்டில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. விக்கெட் கீப்பிங் பணி செய்வதால், அவருக்கு மூட்டு பகுதி கடுமையான டேமேஜ் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், 2025 ஆம் ஆம் ஆண்டு எப்படியும் தோனி  ஓய்வு அறிவித்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 அகிலேஷ் யாதவ் முதல் தனுஷ் வரை : உதயநிதிக்கு குவியும் வாழ்த்து!

செந்தில்பாலாஜி அமைச்சரானால் சாட்சிகளை கலைக்க மாட்டாரா?- ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel