நீண்ட நாள் தோழியை மணந்து இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார் சென்னை வீரர் துஷார் தேஷ்பாண்டே.
மும்பையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் பேவரைட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த ஜூன் 12-ம் தேதி இவருக்கு பள்ளித்தோழி நபா காடம்வார் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 21) துஷார் – நபா திருமணம் கோலாகலமாக நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்று உள்ளது.
இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”ஒரு புதிய தொடக்கத்திற்காக இதயங்களை இடம் மாற்றிக் கொண்டோம்” என காதலுடன் பதிவிட்டு திருமண புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தற்போது துஷார் தேஷ்பாண்டே – நபா காடம்வார் ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Here's Tu share a lifetime of love, joy and happily ever after🫶🏼🥰
Congrats to the #SuperCouple! 💛🤩@TusharD_96 pic.twitter.com/vklYtCaYBd
— Chennai Super Kings (@ChennaiIPL) December 22, 2023
முன்னதாக ஜூன் 3-ம் தேதி சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட் தன்னுடைய காதலி உத்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஒரே ஆண்டில் சென்னை அணியின் இரண்டு நட்சத்திர வீரர்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
ஊழல் குற்றவாளி: உடைந்துபோன திமுகவின் கேடயம்!
பிரபாஸ் – பிரித்விராஜின் சலார் எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!