கேப்டனை முதல் ஆளாக சென்னை எடுக்காது… பின்னணி என்ன தெரியமா?
வரும் 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவரே இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதனால், சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில், “சென்னை அணிக்கு மீண்டும் தோனி விளையாட விரும்புகிறார். இதைவிட வேறு என்ன எங்களுக்கு வேண்டும்? கடந்த சில மாதங்களாக தோனியின் முடிவுக்குதான் காத்திருந்தோம். இப்போது, நல்ல முடிவு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
புதிய ஐ.பி.எல். விதிப்படி சர்வதேச போட்டிகளில் 5 ஆண்டுகள் வரை விளையாடாத தோனியை அன்கேப்டு வீரர்கள் வரிசையில் சென்னை அணி ரூ. 4 கோடிக்கு வாங்கிக் கொள்ள முடியும்.
இதையடுத்து, சென்னை அணி வரும் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் முதல் வீரராக ரவீந்தர ஜடேஜாவை டிக் செய்யும் என தெரிகிறது. அடுத்து கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் 3வது வீரராக பந்துவீச்சாளர் பதிரானா ஆகியோர் எடுக்கப்படவுள்ளனர். அதே போல, சிவம் துபேவையும் சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளும் என தெரிகிறது.
சென்னை அணி வீரர் ரவீந்தர ஜடேஜா இந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதும் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவரையே முதன் முதலாக தக்க வைத்துக் கொள்ள சென்னை அணி விரும்புகிறது. ரவீந்தர ஜடேஜா 18 கோடிக்கும் ருதுராஜ் கெயிக்வாடுக்கு 14 கோடியும் கிடைக்கும். பதிரானாவுக்கு 11 கோடியும் கிடைக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இருமொழிக் கொள்கை, தமிழ் ஆட்சிமொழி: தவெக கொள்கை அறிவிப்பு!
தவெக மாநாட்டில் மயக்கம் ஏன்? – மருத்துவர் விளக்கம்!