நடப்பு 16-வது ஐபிஎல் சீசன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே 6-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று (மே 3) காலை 9.30 மணிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் ரூ.1500, ரூ.2000, ரூ.2500 டிக்கெட்டுகள் கவுண்டர்களிலும் ரூ.3000, ரூ.5000 டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் விற்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று (மே 2) இரவு முதல் டிக்கெட் கவுண்டர்களின் முன்பாக ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் அவர்களுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் லேசான தடியடி நடத்து ரசிகர்கள் கூட்டத்தை கலைத்தனர்.

இதுகுறித்து ரசிகர்கள் சிலர் கூறும்போது, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவது இது தான் கடைசி என்று சொல்கிறார்கள். அதனால் எப்படியாவது அவரது பேட்டிங்கை காண வேண்டும் என்று டிக்கெட் வாங்க வந்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.
செல்வம்