csk matheesha pathirana Instagram
பணத்தால் விசுவாசத்தை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது என சென்னை அணியின் இளம் வீரர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருக்கும் ஸ்டோரி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான், லக்னோ, குஜராத் என மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றன.
இதில் டெல்லி, பெங்களூர், பஞ்சாப் மற்றும் லக்னோ உள்ளிட்ட 4 அணிகள் மட்டுமே இன்னும் கோப்பை வெல்லவில்லை. இதற்கிடையில் தொடருக்கு முன் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை பிற அணிகளில் இருந்து வாங்கி கொள்ளலாம் என்ற விதி ஐபிஎல்லில் உள்ளது.
இதன் அடிப்படையில் தான் சமீபத்தில் மும்பை அணியால் ஹர்திக் பாண்டியா பணம் கொடுத்து வாங்கப்பட்டார். அதேபோல பிற அணிகளில் இருந்தும் சிறந்த வீரர்களை வாங்கிட ஒவ்வொரு அணியும் முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை அணியின் இளம் பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அணியின் இளம் வீரர்களில் ஒருவரான பதிரனா, கேப்டன் தோனிக்கும் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார்.
Many teams would have approached Pathirana but his message is clear and loud😉🦁💛#IPL2024 pic.twitter.com/kiUs8IGxS5
— Hustler (@HustlerCSK) December 9, 2023
பதிரனா மீது பெரும் நம்பிக்கை வைத்து தோனி அவரை சென்னை அணிக்கு எடுக்க, அதை காப்பாற்றும் வகையில் பதிரனா சிறப்பாக ஆடி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ”எந்த பணத்தாலும் விசுவாசத்தை விலைக்கு வாங்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பிற அணிகளில் இருந்து அவரை அதிக பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில் குஜராத் சிஓஓ அரவிந்தர் சிங் தங்களுடைய அணியின் நட்சத்திர வீரர் ஷமியை பணம் கொடுத்து வாங்கிட, ஐபிஎல் அணி ஒன்று முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
போலி சுங்கச்சாவடி அமைத்து ரூ.75 கோடி வசூல்… 5 பேர் மீது பாய்ந்தது வழக்கு!
ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடும் சூர்யா?
csk matheesha pathirana Instagram