ben stokes out of ipl 2024

ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்… CSK  அணிக்கு பின்னடைவா?

ஐ.பி.எல் விளையாட்டு

சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என சென்னை அணி அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை கடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி ரூபாய் 16.25 கோடிகள் கொட்டிக்கொடுத்து எடுத்தது. ஆனால் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணிக்காக விளையாடினார்.

இந்த நிலையில் உடல் தகுதி மற்றும் அதிக பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வருகின்ற 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

குறிப்பாக 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா உடனான டெஸ்ட் தொடர் மற்றும் டி 20 உலகக்கோப்பை ஆகியவை கருத்தில் கொண்டே ஸ்டோக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இதை CSK அணியும் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 17-வது சீசனுக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இதில் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக சென்னை அணி எந்த வீரரை ஏலத்தில் எடுக்கவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

’குருவிக்காரன்’ ஆக நடிக்கும் யோகி பாபு: புது அப்டேட்!

’தா.ம.கா எந்த கூட்டணியில் உள்ளது?’: ஜி.கே.வாசன் பதில்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *