மெஸ்ஸியை வெல்ல குரோஷியா வீரர் சொன்ன ரகசியம்!

Published On:

| By Jegadeesh

ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடுவதற்கு எந்த பயமுமில்லை என்றும் லயோனல் மெஸ்ஸி-க்கு என்று பிரத்யேக திட்டம் எதுவுமில்லை எனவும் குரோஷியா அணியின் ஜோசிப் ஜுரனோவி தெரிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா – குரோஷியா அணிகளும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – மொராக்கோ அணிகள் மோத உள்ளன.

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், குரோஷியா அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு சற்றே கடினமான ஒன்றாக கால்பந்து விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஒவ்வொரு ஆட்டத்திலும் கூடுதல் நிமிடங்கள் வரை ஆட்டத்தை கொண்டு செல்லும் குரோஷியா அணி, பெனால்டி ஷூட் அவுட் மூலமாக வெற்றிபெறுவதால், அர்ஜென்டினா அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்நிலையில், குரோஷியா நடுகள வீரர் ஜோசிப் ஜுரனோவி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதியில் குரோஷியா அணியை எதிர்த்து அர்ஜென்டினா விளையாட உள்ளது.

இதற்காக குரோஷியா அணி பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். எங்களின் ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் மட்டும் போதுமானது. எங்கள் அணியின் வெற்றிக்கான ஒரே ரகசியம் ஒற்றுமை தான்.

குரோஷியா வீரர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போல் கால்பந்தை விளையாடுகிறோம். அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி-க்கு என்று பிரத்யேக திட்டம் எதுவுமில்லை.

எப்போதும் குரோஷியா அணியினர் ஒரு வீரருக்கான திட்டத்துடன் களமிறங்க மாட்டோம். ஒட்டுமொத்த அணியையும் தடுக்கவே களமிறங்குகிறோம்.

மேன் மார்க்கிங் உள்ளிட்ட திட்டங்களுடன் வரப்போவதில்லை. ஏனென்றால் அர்ஜென்டினா அணி என்பது மெஸ்ஸி மட்டுமல்ல என்று தெரிவித்தார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வாய்ப்பு வழங்காத இந்தியா:அயர்லாந்து அணிக்கு போகிறாரா சஞ்சு சாம்சன்?

ரொனால்டோவை கொண்டாடிய கோலி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share