டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, பீச் வாலிபால் விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸில் தொடங்கவுள்ளது. லீக் சுற்றில் அமெரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளை வீழ்த்திய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடந்த நிலையில், சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் உள்ள பல மைதானங்களில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று (ஜூன் 16) அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸிற்கு பயணம் மேற்கொண்டனர். பின்னர், ஓய்வெடுத்த இந்திய அணி வீரர்கள், இன்று (ஜூன் 17) பார்படாஸ் பீச்சில் உற்சாகமாக விளையாடியுள்ளனர்.
இந்திய அணியின் விராட் கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம் சென்ற போது இதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பீச் வாலிபால் விளையாடினர். இந்நிலையில், ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
போட்டியில் விளையாடுவதற்கும் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களிலேயே பல்வேறு போட்டிகளில் விளையாடி பழக்கப்படுத்தி கொண்டுள்ளனர்.
ஆனால், இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தான் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விளையாட உள்ளது. இதனால் 3 நாட்கள் இடைவேளை இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பதியில் தல அஜித் தரிசனம்… ரசிகர் கொடுத்த கிஃப்ட்!
ரயில் விபத்து: ஸ்பாட்டுக்கு சென்ற மத்திய ரயில்வே அமைச்சர்!