ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் நடந்த ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை.
அந்தத் தொடரிலும் லட்சுமண் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் மருத்துவக்குழு கண்காணிப்பில் திராவிட் உள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன.
மீண்டும் நடத்தப்படும் சோதனையில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்திய அணியினருடன் ராகுல் டிராவிட் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பையில் இந்திய அணி வரும் 28ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
ஐசிசி ஒருநாள் தரவரிசை: மூன்றாவது இடத்தை பிடித்த இந்தியா!