சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஐபிஎல் லீக் 41ஆவது போட்டி தொடங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின, இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் ருதுராஜ் கெய்வாட் 31 பந்துகளில் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே அதிகபட்சமாக 92 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்கமால் விளையாடினார்.
சிவம் துபே 17 பந்துகளில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மொயின் அலி 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரவீந்திர ஜடேஜா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக களமிறங்கிய எம்.எல்.தோனி, கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்சர்கள் அடித்து, 4 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.
மொத்தமாக 200 ரன்கள் அடித்து, பஞ்சாப் அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 14.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
பிரியா
முதல்வரின் கள ஆய்வு : 4 துறை அதிகாரிகள் மாற்றம்!
துணை முதல்வர் ஆகிறேனா?: உதயநிதி பதில்!