காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப்: டபுள் பதக்கம் வென்ற இந்தியா

Published On:

| By srinivasan

காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குத்துச்சண்டை, பளுதூக்குதல் என பல பிரிவுகளில் இந்திய வீரர்கள் பலரும் தொடர்ந்து பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.

இந்திய வீரர்கள் எல்தோஸ் பால் 17.03 மீ., அப்துல்லா அபுபக்கர் 17.02 மீ. தூரம் கடந்து முறையே தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.

  • க.சீனிவாசன்

மன்னிப்பு கேட்ட பூஜா: கொண்டாடச் சொல்லும் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share