காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று (ஜூலை 30) இரண்டாவது பதக்கத்தை அறுவடை செய்திருக்கிறது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவரும் 22வது காமன்வெல்த் விளையாட்டில், 55 கிலோ பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீரர் சங்கத் மகாதேவ் சர்கார், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் தங்கப்பதக்கத்தை ஒரு கிலோ எடை வித்தியாசத்தில் தவறவிட்டார்.
இதன்மூலம் இன்று (ஜூலை 30) காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றது.
அதேபோல், இன்று நடைபெற்ற 61 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் பிரிவில் 269 கிலோ எடையைத் தூக்கி மற்றொரு இந்திய வீரர் குருராஜா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் தொடரில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கம் இது. குருராஜா, கடந்த 2018ஆம் நடைபெற்ற காமன்வெல்த் தொடரிலும் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்