காமன்வெல்த்: பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரருக்கு வெண்கலம்!

Published On:

| By Prakash

காமன்வெல்த் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற ஆடவர் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் லவ்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 72 நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ள இந்தப் போட்டியில் இந்தியாவும் பல பிரிவுகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற ஆடவர் 109 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் லவ்ப்ரீத் சிங், 355 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும், கிளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் 192 கிலோவும் தூக்கி அவர் 3ம் இடம்பிடித்தார்.

அதுபோல், இன்று நடைபெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி, கனடாவை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இது, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது. இதில், இந்திய அணி வெற்றிபெற்றால், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகும்.
ஜெ.பிரகாஷ்

சுரேஷ் ரெய்னாவுக்கு டாக்டர் பட்டம்: தமிழக பல்கலை அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel