காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஆகஸ்ட் 13) தன்னுடைய இல்லத்தில் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத், ’பிரதமரின் பேச்சு உறுதுணையாக இருந்தது’ என்றார்.
இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 22வது காமன்வெலத் விளையாட்டுப் போட்டியில், 208 இந்திய வீரர், வீராங்கனைகள் 16 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
இந்த முறை பதக்க பட்டியலில் 4வது இடத்தை பிடித்த இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 61 பதக்கம் கிடைத்தது. இந்த தொடரில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது.

இதன் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சந்தித்தன. இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஆகஸ்ட் 13) சந்தித்தனர்.
தனது வீட்டுக்கு வரழைத்து காமன்வெலத் வீரர், வீராங்கனைகளை அவர் பாராட்டினார். பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளரும் கலந்துகொண்டார்.
இந்த விருந்துக்குப் பேசிய ஹர்மன்ப்ரீத், “ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானது.
பிரதமர் மோடி எங்களிடம் பேசும்போது ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதாக இருந்தது. அனைவரும் எங்களது கடின உழைப்பை பாராட்டினர்.
இது மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய சாதனை” என்றார். இந்த நிகழ்வின்போது மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரும் கலந்துகொண்டார்.
ஜெ.பிரகாஷ்
நாமெல்லாம் ஒரே குடும்பத்தினர் : காமன்வெல்த் வீரர்களிடம் மோடி