காமன்வெல்த் போட்டியில் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 72 நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ள இந்தப் போட்டியில் இந்தியாவும் பல பிரிவுகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வேட்டையாடி வருகிறது.
நேற்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் சூபெய்லியை வீழ்த்தினார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பவினா பட்டேல் 11-6, 11-6, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதன்மூலம் மேலும் ஒரு பதக்கம் (தங்கம் அல்லது வெள்ளி) உறுதியாகியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
செஸ் ஒலிம்பியாட்: நாராயணன் வெற்றி