காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்து இருக்கிறது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன்(ஆகஸ்ட் 8) முடிவடைகின்றன. கடைசி நாளில் நடைபெற்ற பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல்லி விளையாடினர். முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதேபோல் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றார் லக்ஷயா சென். மலேசிய வீரர் சே யங்கை எதிர்கொண்ட அவர் 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து தங்கம் வென்ற நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் தங்கம் கிடைத்து இருப்பதால் காமன்வெல்த்தில் 20 தங்கம் உள்பட 57 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது இந்தியா.