ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளர்களின் பெயர்கள் இன்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவி சாஸ்திரி, கெளதம் கம்பீர், இர்ஃபான் பதான் உள்ளிட்ட இந்திய சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக 1984ஆம் ஆண்டுமுதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த கோப்பையை இந்திய அணி 7 முறை வென்றிருக்கிறது. இந்த வருடத்துக்கான ஆசியக் கோப்பை இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியாலும், பாதுகாப்பில்லாத காரணங்களாலும், மக்களின் தொடர் போராட்டங்களாலும் இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள இந்த ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன.

சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11 அன்று துபாயில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோத இருக்கின்றன.
இதில், ஆகஸ்ட் 28ம் தேதி இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்கான அணி வீரர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த ஆசியக் கோப்பையை முன்வைத்தே இந்திய சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை டி20 போட்டி – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இப்போட்டிக்கான வர்ணனையாளர்களின் பெயர்களும் இன்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து ஸ்டார் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பதிவில்,
ஆங்கில வர்ணனையாளர்களாக ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவி சாஸ்திரி, கெளதம் கம்பீர், இர்ஃபான் பதான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், அர்னால்ட், அதர் அலி கான், தீப் தாஸ்குப்தா ஆகியோரை அறிவித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
இலங்கை நெருக்கடி: ஆசிய கோப்பை கிரிக்கெட் நடத்துவதில் சிக்கல்!