தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான அட்டவணை இன்று(ஜூன் 28) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ‘முதலமைச்சர் கோப்பை’க்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது.
பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுப் போட்டிகல் நடத்தப்பட்டது.
இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இவர்களில் வெற்றி பெற்ற 27,000க்கும் மேற்பட்டோர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான அட்டவணையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று(ஜூன் 28) வெளியிடப்பட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் ஜூலை 25 ஆம் தேதி வரை மெரினா கடற்கரை, ராமச்சந்திரா பல்கலைகழகம், நேரு உள் விளையாட்டு அரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம், வேளச்சேரியில் உள்ள aquatic complex, நேரு பார்க் விளையாட்டு வளாகம், லொயோலா கல்லூரி மைதான ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
முதலமைச்சர் போட்டிகான அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி, போட்டியை நேரில் காண வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கிராமப்புற – ஏழை – எளிய விளையாட்டு வீரர்களின் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
27000 வீரர் – வீராங்கனையர் பங்கேற்கவுள்ள மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் வரும் ஜூலை 1 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள். போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை உற்சாகப்படுத்த பொதுமக்கள் – விளையாட்டு ஆர்வலர்களை அழைக்கின்றோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விவாகரத்து செய்யப்போகிறேனா? அசின் விளக்கம்!
ஏழை மக்களை காக்கும் குடியிருப்பாக மாறியுள்ளது ஜார்ஜ் கோட்டை: முதல்வர்