சென்னையில் ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டி அறிவிப்பு!

விளையாட்டு

சென்னையில் ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டி ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ‘முதலமைச்சர் கோப்பை’க்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது. கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே நடத்தப்பட்டது.

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இவர்களில் வெற்றி பெற்ற 27,000க்கும் மேற்பட்டோர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 01ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக விளையாட்டுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (ஜூன் 24) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 27,000க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள், பயிற்றுநர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் அனைவருக்கும் போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாகத் தனியார் விடுதிகள் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் 2000க்கும் மேற்பட்ட அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ மாணவியர் விடுதிகளில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மூன்று வேளை உணவு மற்றும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் இடங்களில் காவல்துறை மூலம் உரியப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. வீரர் வீராங்கனைகள் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்குச் செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

பாஜகவுக்கு ஓட்டுபோட்ட திமுக: செந்தில் பாலாஜி இல்லாத கோவை நிலவரம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : பன்னீர் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *