செஸ் உலகக் கோப்பை: பிரக்ஞானந்தா போராடி தோல்வி!

விளையாட்டு

உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை தோற்கடித்து மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

அஜர்பைஜான் நாட்டின் பகுவில் நடைபெற்ற FIDE செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் மற்றும் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.

நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 22) நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டமும், நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கர் ஆட்டம் இன்று நடைபெற்றது. இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து 2வது சுற்றில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கருப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர் கொண்டார். மறுபக்கம் கார்ல்சன் போட்டியை டிரா செய்தால் போதும் என்ற நிலையில் களமிறங்கினார்.

கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தி வந்தனர். போட்டியின் 22வது நகர்தலில் போட்டியை டிரா செய்ய இருவரும் ஒப்புக் கொண்டனர்.

போட்டி டிரா செய்யப்பட்டதால் கார்ல்சன் செஸ் உலக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இறுதி வரை கார்ல்சனுக்கு நெருக்கடி கொடுத்து சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

மோனிஷா

இட்லிகடை டூ இஸ்ரோ: சந்திரயான் 3 குழுவில் சாதனை இளைஞர்!

ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்கள் கைது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *