செஸ்: வரலாறு படைத்த தமிழக வீரர்… பிரபலங்கள் வாழ்த்து!

விளையாட்டு

அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அஜர்பைஜான் நாட்டில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா நேற்று நடைபெற்ற உலகின் மூன்றாம் நிலை செஸ் வீரரான ஃபாபியனோ கருனாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

முன்னதாக, அரையிறுதி சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபாபியனோ கருனாவை எதிர் கொண்ட அவர், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் ஆட்ட நேர முடிவில்  1-1  என சமநிலையில் இருந்தார்.

பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க நேற்று (ஆகஸ்ட் 21)  நடைபெற்ற ‘டை – பிரேக்கர்’ வாய்ப்பில் 3.5 – 2.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு  செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற வரலாற்று  பெருமையையும், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைந்த வயதுடையவர் என்ற பெருமையையும் அவர் பெற்று உள்ளார்.

இதையடுத்து இன்று நடைபெறும்  இறுதிச்சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனுடன் மோதுகிறார் பிரக்ஞானந்தா.

இச்சூழலில் பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “செஸ் உலகக்கோப்பை போட்டியில்நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மிளிருங்கள்.” என்று கூறியுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரக்ஞானந்தாவை வாழ்த்தி வெளியிட்டுள்ள  எக்ஸ் பதிவில், “செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களின் அற்புதமான சாதனையால் ஒட்டுமொத்த தமிழ்நாடு பெருமை கொள்கிறது. இறுதிப் போட்டியில் பெரும் வெற்றியை பெற்றிட நாங்கள் வாழ்த்துகிறோம்.”என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உலகக்கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள். மேக்னஸ் கார்ல்சன் உடனான இறுதிப் போட்டிக்கு வாழ்த்துக்கள். கோடிக்கணக்கான இந்தியர்கள் உங்களுக்காக கரகோஷம் எழுப்புவோம்.”என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பிராக் இறுதிப் போட்டிக்கு செல்கிறார்.  அவர் டைபிரேக்கில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தினார், இப்போது மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார். What a performance.” என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ”வாகை சூட வாழ்த்துகிறோம்.”என்று கூறியுள்ளார்.

அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உலகக்கோப்பை செஸ் தொடர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்து இருக்கும் எங்கள் இளம் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்தை தெரிவிக்கிறேன்.

அபாரமான நகர்வுகள் மூலமாக ஒவ்வொரு இந்தியனையும் நீங்கள் பெருமைப்பட வைத்து உள்ளீர்கள். இறுதிப்போட்டியில் எங்கள் செஸ் அதிசயம் மிகவும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.” என்று  தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிரிமினலுடன் ரஜினி

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?

+1
0
+1
0
+1
0
+1
8
+1
3
+1
1
+1
1

1 thought on “செஸ்: வரலாறு படைத்த தமிழக வீரர்… பிரபலங்கள் வாழ்த்து!

  1. தமிழகத்தின் ப்ரக்யாநந்தா உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் மேகனஸ் கார்ல்சனை எதிர் கொள்ளவிருக்கிறார். இவர் இளம்வயதிலேயே இந்த சாதனையை புரிவது மிகவும் போற்றுதலுக்குரியது.இப்போட்டியில் இவர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று நம் இந்திய நாட்டின் புகழை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்று காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்பாளை பரிபூர்ணமாக வேண்டிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *