செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர்களின் இன்றைய வெற்றி!

விளையாட்டு

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக காய் நகர்த்தி வெற்றி பெற்றனர். அவர்களின் இன்றைய செயல்பாடுகளை பார்க்கலாம்….

பொதுப் பிரிவு ஓபன் B அணியில் விளையாடிய ரோனக் சத்வானி வெற்றி.

வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய ரோனக் சத்வானி தனது 38வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

சுவிட்சர்லாந்து வீரர் பேபியனை எதிர்கொண்ட இந்தியாவின் பி பிரிவு அணியின் ரோனக் சத்வானி வெற்றி பெற்றார்.

இந்திய A பிரிவில் களமிறங்கிய விதித் சந்தோஷ், கிரீஸ் வீரர் நிக்கோலஸ் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.

இந்திய B பிரிவில் விளையாடிய குகேஷ், சுவிட்சர்லாந்து வீரர் நிகோ ஜியார்கிடிஸ்-ஐ வீழ்த்தினார்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், தனது 37-வது நகர்வில் சுவிட்சர்லாந்து வீரரை வீழ்த்தினார்.

இந்திய ஓபன் B அணியினர் சுவிட்சர்லாந்தை 3- 0 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

3வது சுற்றில் இந்திய A அணியில் களமிறங்கிய ஹரிகிருஷ்ணா வெற்றி

ஹரிகிருஷ்ணா தனது முப்பதாவது நகர்வில் கிரீஸ் வீரர் டிமிட்ரோயிசை வீழ்த்தினார்.

இந்திய பொதுப் பிரிவு C அணியில் விளையாடிய குப்தா வெற்றி.

ஐஸ்லாந்து அணி குட்முன்டுர்-ஐ எதிர்த்து விளையாடிய குப்தா, தனது 36-வது நகர்வில் வெற்றி பெற்றார்.

இந்திய B பிரிவில் விளையாடிய சரின் நிகில், சுவிட்சர்லாந்து வீரர் செபாஸ்டியனை வீழ்த்தினார்

இந்திய ஓபன் c அணியில் களமிறங்கிய சேதுராமன், ஐஸ்லாந்து வீரர் ஸ்டெபான்சனை வீழ்த்தினார்

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சேதுராமன், 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இந்திய மகளிர் B அணியில் வந்திகா அகர்வால், இந்தோனேஷிய வீராங்கனை கரிஷ்மாவை வீழ்த்தினார்

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய வந்திகா அகர்வால், 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இந்திய பெண்கள் C அணியின் நந்திதா 3 வது சுற்றில் வெற்றி.
ஆஸ்திரிய வீரங்கனை சியாரா போல்டர்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நந்திதா வெற்றி என அறிவிப்பு.

இந்திய பெண்கள் A அணியில் விளையாடிய ஹரிகா துரோணவள்ளி, தன்னுடைய போட்டியை டிரா செய்தார்.

இங்கிலாந்தின் ஹவுஸ்காவிற்கு எதிராக கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அவர் தன்னுடைய 40வது நகர்த்தலில் போட்டியை டிரா செய்தார்.

நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா துரோனவள்ளி தனது முதல் போட்டியை வெற்றி தோல்வியின்றி சமன் செய்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *